விரைவில் வரவுள்ள பொங்கல் பண்டிகையை ஒட்டி எத்தனை நாட்கள் அரசு விடுமுறை விடப்படுகிறது என்று இங்கே தெரிந்து கொள்ளலாம்.
ஆடி மாதத்தில் விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் பெறும் பருவமே தை மாதம் ஆகும். அறுவடை செய்த நெல்லியில் இருந்து புத்தரிசி எடுத்து, அதனுடன் சர்க்கரை, பால், நெய் சேர்த்து புதுப் பானையில் புத்தடுப்பில் சோறாக்கி சூரியனுக்கும், மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல்.
இந்த பண்டிகை உழைக்கும் மக்களின் திருநாளாக இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக சூரியனுக்கும் பிற உயிர்களுக்கும் நன்றி சொல்லப்படுகிறது.