தர்பார் படம் ரிலீஸாகும் அன்று ஹெலிகாப்டர் மூலம் ரஜினி கட்அவுட்டுக்கு மலர் தூவ ரசிகர்கள் அனுமதி கோரியுள்ளனர்
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படம் வரும் 9ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டம் மெய்யனூர் கிராமத்தில் உள்ள ஏஆர்ஆர்எஸ் திரையரங்க வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள ரஜினி பேனருக்கு வரும் 9ம் தேதி ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவ அனுமதி அளிக்குமாறு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
9ம் தேதி காலை 9 மணி முதல் 11 மணிக்குள் மலர் தூவ அனுமதி அளிக்கக் கோரப்பட்டுள்ளது. அந்த மனுவை புகைப்படம் எடுத்து ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளத்தில் போஸ்ட் செய்து தலைவர் மாதிரி வருமா என்று பெருமையுடன் தெரிவித்துள்ளனர்.
இதை பார்த்த பிற ரஜினி ரசிகர்கள் சான்சே இல்லை என்று கூறியுள்ளனர். ஆனால் மற்றவர்களோ இந்த கட்அவுட், ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவுவதற்கு ஆகும் செலவை ஏதாவது ஏழை குழந்தைகளின் பள்ளி செலவுக்கு அளித்தால் உதவியாக இருக்குமே என்று தெரிவித்துள்ளனர்