புல்லட் ரயில் இப்போ எதுக்கு?: பிரேக் போடும் புது முதல்வர் உத்தவ் தாக்கரே

மும்பை: மகாராஷ்ராவில் மூன்றாம் கட்ட மெட்ரோ ரயில் பணியை நிறுத்தியதைத் தொடர்ந்து, புல்லட் ரயில் திட்டத்தையும் தற்காலிகமாக நிறுத்துவதாக முதல்வர் உத்தவ் தாக்கரே முடிவு செய்துள்ளார்.


மகாராஷ்டிர மாநிலத்தில் முதல்வராக பதவியேற்ற கையோடு, ஆரே காலனியில் மெட்ரோ ரயில் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தார் உத்தவ் தாக்கரே.


இதைத் தொடர்ந்து தற்போது ஜப்பான் நிதி உதவியுடன் மும்பையில் புல்லட் ரயில் இயக்கும் திட்டத்தையும் நிறுத்தி வைப்பதாக அறிவித்திருக்கிறார்.

சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய உத்தவ் தாக்கரே, “இப்போது நடைபெற்றுவரும் பணிகள் குறித்து அறிக்கை அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கோரியுள்ளோம்.


செலவு, சிக்கல்கள் மற்றும் திட்டப்பணிகளை முடிக்க வேண்டிய காலக்கெடு போன்றவற்றைக் கேட்டிருக்கிறோம். அந்த அறிக்கையைப் பெற்று, மக்களுக்கு எது முதலில் தேவையோ அதற்கு முன்னுரிமை கொடுப்போம்.” என்று கூறினார்.