நாடு முழுவதும் வெங்காயம் விலை உச்சத்தை தொட்டுள்ள நிலையில் எதிர்கட்சிகள் விலையேற்றம் குறித்து கேள்வி மத்திய அரசை கேள்வி எழுப்பிவருகின்றனர்.
வெங்காயம் விலை நாளுக்கு நாள் அதிகமாகிறது! அரசு வெங்காயத்தின் அவசியத் தேவையை உணர்ந்து விலையை கட்டுக்குள் வைக்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனை நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவார்கள்” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். ]
அந்தவகையில் திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி வெங்காய உயர்வு குறித்து ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்தார்.
இந்த விவகாரம் குறித்து மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது,
வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்துவது தங்கள் கையில் இல்லை. எனினும் விலையை கட்டுப்படுத்தும் வகையில் வெங்காய ஏற்றுமதிக்குத் தடை விதித்துள்ளோம். 1.2 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயம் இறக்குமதி செய்யவுள்ளோம்” என தெரிவித்தார்.